Site icon அநேகன்

எம்சிஓ காலகட்டத்தில் 30 ஆயிரம் சிறு நடுத்தர வர்த்தகர்கள் பாதிப்பு!- நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர், நவ. 9-

கோவிட் -19ஐ தடுப்பதற்காக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ) முதன்முதலில் செயல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து மொத்தம் 32,469 சிறு நடுத்தர மற்றும் நிறுவனங்கள் (எஸ்.எம்.இ) செயல்படுவதை நிறுத்திவிட்டன என்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் நிறுவனங்கள் ஆணையத்தின் (எஸ்.எஸ்.எம்) புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி அமைச்சு, மார்ச் 18 முதல் ஜூன் 9 வரை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு முதல் கட்ட நடவடிக்கைகளில் 9,675 சிறு, நடுத்தர வர்த்தகர்கள் தங்களின் தொழிலை நிறுத்தியதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.

மீட்டுபுநிலை நடமாட்டக் காட்டுப்பாடு உத்தரவு கால கட்டத்தின் போது ஜூன் முதல் செப்டம்பர் வரை, 22,794 சிறு, நடுத்தர வர்த்தகர்கள் தங்களின் நடவடிக்கைகளை முடக்கினார்கள்.

மிகக் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் மிக உயர்ந்த எண்ணிக்கை பதிவானது. அந்த மாதம் 17,800 சிறு, நடுத்தர வர்த்தக துறைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் வர்த்தகத்தை நிறுத்திய சிறு நடுத்தர வர்த்தகர்கள் குறித்து உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லோ எழுப்பிய கேள்விக்குத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு இந்த விவரத்தை வெளியிட்டது.

இதற்கிடையில், கோவிட் -19 பொருளாதார வீழ்ச்சியால் மைக்ரோ தொழில்முனைவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதன் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அரசாங்க உதவியைப் பெறவில்லை.

Exit mobile version