Site icon அநேகன்

மின்னியல் வலிமையில் ஆஸ்ட்ரோ வானொலி வளர்ச்சி அடைகிறது

கோலாலம்பூர், நவம்பர் 12:-

தொற்றுநோய் காலக்கட்டத்தின் போது வானொலியின் முக்கியத்துவத்தையும் உசிதத்தையும் GfK Radio Audience Measurement (RAM)-இன் 2-ஆம் கணக்கெடுப்பு உறுதிப்படுத்துகிறது. தீபகற்ப மலேசியாவில், 93.6%, 10+ வயதுடைய நேயர்களை வானொலி சென்றடைந்திருக்கின்றது என்றும் இது முறையே 20.3 மில்லியன் வாராந்திர வானொலி கேட்பவர்களுக்கு சமம் என சமீபத்திய RAM ஆய்வு குறிப்பிடுகிறது. 20.3 மில்லியன் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையில், ஆஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து 74.3% சந்தைப் பங்கைக் கொண்டு முதன்மை வகிக்கிறது. மேலும், 15.1 மில்லியன் வாரந்திர வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையுடன் ஆஸ்ட்ரோ வானொலி அதிக எண்ணிக்கையிலான நேயர்களைக் கொண்டுள்ளது.

ஆஸ்ட்ரோ வானொலி அதன் மின்னியல் இருப்பை மொத்தமாக 331.2 மில்லியனாக வலுப்படுத்தியுள்ளது.  அதன் விபரங்கள் பின்வருமாறு:-

RAAGA – முதல் தர தமிழ் வானொலி, ERA – முதல் தர மலாய் வானொலி, HITZ – முதல் தர ஆங்கில வானொலி மற்றும் MY – முதல் தர சீன வானொலி என பதிவிட்டு ஆஸ்ட்ரோ வானொலி தரங்கள் அனைத்து மொழிகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளன. ஆஸ்ட்ரோ வானொலி தரங்கள், முதல் 10 தரவரிசையில் (Top 10 Brands ranking) 6 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

வானொலி ஊடாடும் (interactive) தன்மையையும் சமூக கலந்துறையாடல்களையும் கொண்டது. ஆஸ்ட்ரோ வானொலி ஒரு தூய ஆடியோ அனுபவத்திலிருந்து பன்முக மற்றும் பல தளங்களில் கிடைக்கப்பெரும் சாதனமாக மாறிவிட்டது. அனைத்து மலேசியர்களையும் எதிரொலிப்பதை உறுதி செய்ய அதன் உள்ளடக்கம் நிர்வகிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, மற்றும் விநியோகிக்கப்படுகிறது. MY, முதல் தர சீன வானொலி தனது முகநூலில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பதிவிட்டுள்ளது. MY, முதல் தர தமிழ் வானொலியான ராகா மற்றும் ZAYAN யுடியூப்பில் (YouTube) முறையே 100,000 சந்தாதாரர்களைப் பதிவிட்டுள்ளது. மேலும், ERA ’Tiktokber’ உள்ளிட்ட மின்னியல் பிரச்சாரங்களின் மூலம் ERA Tik Tok அதன் கணக்கில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பதிவிட்டதோடு 300க்கும் மேற்பட்ட காணொளி சமர்ப்பிப்புகளையும் பெற்றன; Sekkisei Clear Wellness உடன் MY ‘Crime Scene Investigation’ மொத்தம் 1.1 மில்லியன் காணொளி பார்வையாளர்களை அடைந்தது; மற்றும், HITZ Morning Crew ‘Fight For Gotcha’ 400,000க்கும் மேலான சமூக வலைத்தள அடைவுநிலையையும் ஈடுபாட்டையும் பதிவிட்டுள்ளது.

இந்த ஆய்வு வானொலி கேட்கும் பழக்கத்தை அறிய 6 வாரங்களுக்கும் மேலாக பாரம்பரிய வானொலி டைரிகள் (75%) , மின்-டைரிகள் (25%) ஆகியவற்றின் கலவையுடன் தீபகற்ப மலேசியா முழுவதும் 6000 தனித்துவமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. 19 வானொலி தரங்கள் இதன் சந்தாதாரர்கள் ஆவர்.

தகவல்கள் மூலம்: GfK Radio Audience Measurement (RAM), Wave 2 2020 | Google Analytics, ஜூலை – செப்டம்பர் 2020 | Facebook Creator Studio, CrowdTangle, YouTube, ஜூலை – செப்டம்பர்  2020 | முகநூல், இன்ஸ்டாகிராம், கீச்சகம், யூடியூப், அக்டோபர் 2020 | Radioactive, ஜூலை – செப்டம்பர்  2020 | முகநூல் ஜூலை – செப்டம்பர்  2020

Exit mobile version