Site icon அநேகன்

தற்போதைய சூழ்நிலை நேருக்கு நேர் படிப்பை அனுமதிக்காது! கல்வி அமைச்சர்

கோலாலம்பூர், நவ. 24-
அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளும் கல்வியாண்டின் இறுதி வரை மூடப்பட வேண்டும், ஏனெனில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதால் அதிக ஆபத்துக்களை ஏற்படுத்துமெனக் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்,

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 763 பள்ளிகள் தங்கள் ஊழியர்களிடையே கோவிட் 19 தொற்றைப் பதிவு செய்துள்ளன.

“இந்த பதிவு துல்லியமான நிலவரம் இல்லை”, ஏனென்றால் சில சம்பவங்கள் அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பள்ளியின் பணியாளர்கள், பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு இந்த தொற்று பரவினால் அது மாணவர்களை வெகுவாகப் பாதிக்குமென்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மாணவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டுமென்பதை நாங்களும் விரும்புகின்றோம். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காண முயற்சிக்கின்றோம். ஆனால் அது மிகவும் சவாலானது.

“நாங்கள் அனைவரும் அதை விரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நிலைமை எங்களை அவ்வாறு செய்ய அனுமதிக்காது,”

இணையம் வழி கற்றல் கற்பித்தல், தொலைக்காட்சி வழிக் கல்வி மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தொடர்பு இல்லாதது குறித்து பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

Exit mobile version