Site icon அநேகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்ய ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை !

சென்னை, நவம்பர் 24:-

முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் கொலை வழக்­கில் தண்­டனை பெற்­றுள்ள பேர­றி­வா­ளன் உள்­ளிட்ட ஏழு பேரை விடு­தலை செய்­ய­வேண்­டும் எனும் கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வரு­கிறது.

குறிப்­பாக பேர­றி­வா­ளன் விடு­தலை செய்­யப்­பட வேண்­டு­மென விஜய் சேது­பதி, ஆர்யா உள்­ளிட்ட நடி­கர்­களும் குரல் கொடுத்­துள்­ள­னர்.

இந்நிலையில், இந்த விடுதலை தொடர்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று ஆளுநரை சந்திதிருக்கின்றார்.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உடனடியாக விடுதலை செய்ய, ஆளுநரிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக, திமுக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை, மேலும் ஒரு வாரம் நீட்டித்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த, 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, பேரறிவாளனுக்கு, 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, கடந்த அக்டோபர் மாதம், அவரது தாயார் அற்புதம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு, 45 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட, இந்த பரோல் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தன்னை விடுவிக்க கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, அடுத்த ஆண்டு, ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Exit mobile version