கோலாலம்பூர், நவம்பர் 24:-
2021 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்கான நிதியை பள்ளிகளின் எண்ணிக்கை, அவைகளின் வகைப்பிரிவு, அரசுப் பள்ளி, அரசு உதவ்வி பெறும் பள்ளி எனப் பல்வகைக் கூறுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு 620 மில்லியன் வெள்ளியைப் பகிர்ந்தளிக்க இந்த முறை கையாளப்படும். அதற்கானப் பொறுப்பை கல்வி அமைச்சே ஏற்றுக்கொள்ள நிதியமைச்சிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் இன்று 2021 பட்ஜெட் தொடர்பான விவாத்ததின்போது டாக்டர் ராட்ஸி குறிப்பிட்டார்.
இது வரை கல்வி அமைச்சின் கீழ் 10,223 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 8,293 பள்ளிகள் அரசுப் பள்ளிகள்; 1,930 பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும்.
இவற்றில் தேசியப் பள்ளி, இடைநிலைப்பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, கிறித்துவப் பள்ளி, தேசிய வகை இடைநிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் சமயப்பள்ளி ஆகியன அடங்கும்.
எனவே, அந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும் நிதி விவரம் பின்வருமாறு:
| பள்ளி வகை | ஒதுக்கீடு |
|---|---|
| SK dan SMK berstatus sekolah kerajaan termasuk Sekolah Berasrama Penuh dan Kolej Vokasional | RM477.48 Million |
| SK dan SMK berstatus sekolah bantuan kerajaan | RM1.2 Million |
| SJKC kerajaan dan bantuan kerajaan | RM74.07 Million |
| SJKT kerajaan dan bantuan kerajaan | RM29.98 Million |
| Sekolah Mubaligh kerajaan dan bantuan kerajaan | RM20.94 Million |
| Sekolah Conforming kerajaan dan bantuan kerajaan | RM4.11 Million |
| Sekolah Agama Bantuan Kerajaan | RM12.23 Million |

