Site icon அநேகன்

தமிழ்ப்பள்ளிகளுக்கு ரி.ம 29.98 மில்லியன் ஒதுக்கீடு போதுமா?

கோலாலம்பூர், நவம்பர் 24:-

2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கானத் தனி ஒதுக்கீடு அறிவிக்கப்படாத நிலையில் இன்று கல்வி அமைச்சர் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை அறிவித்தார்.

இம்முறை தமிழ்ப்பள்ளிகளுக்கு ரி.ம. 29.98 மில்லியன் வழங்கப்படும் என அவர் கூறினார். இந்த நீதி போதுமானதா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

2010ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட முதல் தமிழ்ப்பள்ளிகளுக்கு 100 மில்லியன் ஒதுக்கீட்டை டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு தனியே வழங்கப்பட்டு வந்தது.

2018 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நம்பிக்கை கூட்டணி வெளியிட்ட 2019 வரவு செலவு திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டும் அதிக நிதி வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திற்காக ரி.ம. 29.98 மில்லியன் ஒதுக்கப்பட்டது முறையா என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள்.

கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் அறிவித்த நிதி ஒதுக்கீடு பின்வருமாறு :

Exit mobile version