கோலாலம்பூர், நவம்பர் 26:-
2021 பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி அங்கீகரிக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இந்நிலையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாம் ஆதரிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
தேசியக் கூட்டணி அறிவித்துள்ள இந்த பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் வருத்தமளிக்கும் அளவில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
“மிகவும் கட்டுப்படுத்தட்ட நிலையில் பட்ஜெட் விவாதங்கள் நடந்திருப்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையோ அல்லது சமூக ஊடகங்களில் மக்களின் எண்ண ஓட்டத்தையோ அவர்கள் கேட்கவோ கவனிக்கவோ தயாராக இல்லை.”
ஆகையால், துன் டாக்டர் மகாதீரும் அவரது நண்பர்களும் நாடாளுமன்றத்தில் தாக்க்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆதரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மக்களுக்கான தங்களின் கடமையையும் பொறுப்பையும் முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
துன் டாக்டர் மகாதீரும் பெஜுவாங் தானா ஆயிர் (பெஜுவாங்) கட்சியைச் சார்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் யார் அந்த “நண்பர்கள்” என துன் டாக்டர் மகாதீர் தெளிவுபடுத்தவில்லை. அந்த “நண்பர்கள்” துன் மகாதீருடன் ஒரே சித்தாந்தத்தில் பயணிக்கும் சபாவின் வாரிசான் கட்சியினரா அல்லது நம்பிக்கைக் கூட்டணியைச் சார்ந்தவர்களா என யூகம் பரவலாகப் பேசப்படுகிறது.
எதிர்க்கட்சியினரைத் தொடர்ந்து, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் கண்டிப்பாக 2021 பட்ஜெட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அசராங்கத்தில் பதவி வகிக்காத சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைத்துள்ளனர்.
மேலும், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப், அம்னோ தலைவர் டாக்டர் அகமாட் ஸாஹிட் ஹமிடி ஆகியோர் 2021 பட்ஜெட்டைக் கடுமையான எதிர்க்கின்றனர்.
இதுவரையில் பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசீனுக்கு நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த அளவே பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ளதோடு அந்த ஆதரவு முழுமையாக சோதிக்கப்படவில்லை.
ஒரு வேளை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆதரவு பெறாமலோ அல்ல அங்கீகரிக்கப்படாமல் போனாலோ, மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என அரசாங்கம் பல வகைகளில் மக்களை மறைமுகமாக அச்சுறுத்தி வருகிறது. இது நிலைமையை மேலும் குழப்பமடையச் செய்கிறது என்றும் துன் மகாதீர் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“பட்ஜெட் அங்கீகரிக்கப்படாவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் ? முதலில் தாங்கள் கொண்டு வந்த பட்ஜெட்டுக்கு ஆதரவு கிடைக்காமல் போனது அரசாஙத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையை உறுதிப்படுத்தும் சான்றாக அமையும்.”
இதனால், மானமுள்ள பிரதமர் தனது பதவியைத் துறக்க நேரிடும்.
அடுத்து, மிகச் சாதாரனச் சூழலில், நாடாளுமன்றத்தைக் கலைக்க மாமன்னருக்கு அவர் ஆலோசனை வழங்கலாம்.
நிலைமை இப்படி இருக்க. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொதுத் தேர்தல் நட்த்துவது நிலமையை மேலும் மோசமடையச் செய்யும் என துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
இச்சூழலில், நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினர் அதிகப் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ளாரோ, அவரையே பிரதமர் ஆக்கலாம். இந்த முறையில் மாமன்னர் திருப்தி அடைந்தால், அதிக ஆதரவைப் பெற்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை புதிய ஆட்சியை அமைக்கலாம்.
அப்படி ஒரு புதிய ஆட்சி அமைக்கப்படும் போது, புதிய பட்ஜெட்டைத் தக்கல் செய்யலாம். அல்லது இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் மாற்றங்கள் செய்தும் ஆதரவைப் பெறலாம்.
இந்த முடிவுகள் யாவும் நாடாளுமன்ற சிறப்பு அமர்விம் மட்டுமே முடிவெடுக்க முடியும். மேலும், அதக காலத்தையும் இந்த சிறப்பு அமர்வு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

