புதுராஜெயா, நவம்பர் 27:-
12.8 மில்லியன் கோவிட்-19 தடுப்பு மருந்துகளை மலேசியா அடுத்தாண்டு பெறும். இது சுமார் 6.4 மில்லியன் மக்களின் தேவையை நிறைவு செய்யும்.
தடுப்பு மருந்துகளைப் பெற கடந்த 24 ஆம் நாள் ஃபிஸர் மருந்து நிறுவனத்திலிருந்து வாங்குவது தொடர்பான உடன்படிக்கை ஒன்றிக் கையொப்பமிட்டதை பிரதமர் தான் ஸ்ரீீீ முகிதீன் யாசின் தெரிவித்தார்.
இந்தத் தடுப்பு மருந்தால் 95 % குணமடைய வாய்ப்பு உள்ளதாக கடந்த 9ஆம் நாள் ஃபிஸர் நிறுவனம் தெரிவித்தது.
இந்த உடன்படிக்கையின் படி அடுத்தாண்டு முதல் காலாண்டுக்குள் 1 மில்லியன் தடுப்பு மருந்துகள் அனுப்புவதற்கும், 1.7 மில்லியன் தடுப்பு மருந்துகளை 2ஆம் காலாண்டிலும், 5.8 மில்லியன் தடுப்பு மருந்துகளை 3ஆம் காலாண்டிலும், 4.3 தடுப்ப்ய் மருந்துகளை இறுதிக் காலாண்டிலும் அனுப்புவதற்கும் உறுதியளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ அடாம் பாபாவும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகியோர் உடனிருந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், அந்நிறுவனம் அமெரிக்க உணவு – மருந்து அமைப்பிடம் இருந்தும் அம்மருந்தை வெளியிடும் நாட்டினிடம் இருந்தும் அனுமதி பெற வேண்ட உள்ளது.
மலேசியாவில் பயன்பாட்டுக்கு முன்னர் மலேசிய சுகாதார அமைச்சின் அனுமதியையும் பெற வேண்டியுள்ளது.
கடந்த 22ஆம் நாள் சுகாதார அமைச்சின் வழி சோவேக்ஸ் உடந் ஓர் உடன்படிக்கை செயதிருந்தது. அதன்பட, நாட்டின் 10% மக்களுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்துகளை கோரியிருந்தது.
இந்த 2 உடன்படிக்கையுமே நாட்டின் சுமார் 30% மக்களுக்குப் பயனளிக்க என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தடுப்பு மருந்துகள் கிடைத்த பின்னர் முன் வரிசைப் பணியாளர்கள், மூத்த குடிகள், அபாயகரமான நோய்கள் கொண்டவர்கள் உட்பட ஆபத்து அதிகமாக இருப்போருக்கு முதலில் வழங்கப்படும். பின்னர் , கட்டம் கட்டமாக எல்லோருக்கும் வழங்கப்படும்.
மலேசியாவுக்குப் போதுமான கோவிட்-19 தடுப்பு மருந்துகளை வெளியிடும் பல நிறுவனங்களுடன் சுகாதார அமைச்சும், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், சீன அரசாங்கத்துடன் இணைந்து கோவிட்-19 தடுப்பு மருந்துக்கானப் பரிசோதனையை மலேசிய அரசாங்கம் தற்போது தொடங்கியுள்ளது.
இந்தப் பரிசோதனையில் 3,000 பேர் உட்படுத்தப்பட்டு அதன் பாதுகாப்பையும் குணப்படுத்தும் தன்மையையும் அளவிடப்படும்.
இவ்வாண்டு திசம்பரில் தொடங்கவிருக்கும் இப்பரிசோதனையை தேசிய மருத்துவ ஆராய்ச்சி பதிவின் கீழ் உள்ள உள்ளூர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் எனப் பிரதமர் கூறினார்.
சுகாதார அமைச்சு விதித்துள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விதி முறைகளையும் அம்மருந்து தயாரிப்பு முறை பின்பற்றியுள்ளதா என்று ஆராய்ந்த பின்னரே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப் படும்.
சுகாதார அமைச்சிப் கீழ் உள்ள 8 ஆராய்ச்சி மையங்களில் அந்தப் பரிசோதனை நடத்தப்படும்.
இந்த கூட்டு முயற்சியின் கீழ் மூன்றாம் கட்டப் பரிசோதனை நடத்தப்பட இருப்பதைத் தொடரந்து IMBCAMS சீன நாட்டு நிறுவனத்துக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடந்த பின்னர் தாான் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் நாட்டில் பயன்படுத்தப்படும். இவ்விவகாரத்தில் அரசாங்கம் எவ்விதத்திலும் சமாதானம் செய்துகொள்ளாது என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்

