கோலாலம்பூர், நவம்பர் 30:-
மலேசியாவில் புகழ்பெற்ற வெதுப்பி நிறுவனமான கார்டினியா பேக்கரி (கேஎல்) சென். பெர். தனது சில வெளியீடுகளின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலையேற்றம் 0.05 காசு முதல் 0.20 வரையில் இருக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது என அவானி செய்தி வெளியிட்டுள்ளது.
பால், கொக்கோ, காய்கறி கொழுப்பு ஆகிய மூலம்ப் பொருட்கள் விலையேற்றத்தாலும் பொட்டலமாக்குதல் செலவு அதிகரித்துள்ளதாலும் இந்த விலையேற்றம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய பன் வகைகளில் சிலவற்றுக்கு 0.05 காசு அதிகரிப்பும் டெலிசியா வகை வெதுப்பிகளுக்கு 0.20 அதிகரிப்பும் செய்திஉர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

