வாஷிங்டன், திசம்பர் 1:-
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி 95% பலன் அளிப்பதாக 3ம் கட்ட பரிசோதனையில் தெரிய வந்தது.
இந்நிலையில், இறுதிக் கட்ட ஆய்வின் அடிப்படையில் மாடர்னாவின் அந்தக் கண்டுபிடிப்பு 100 விழுக்காடு செயல்திறனைக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பியவின் அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்துக்காக விண்ணபிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முறையான் அங்கீகாரம் கிடைத்தால், திசம்பர் இறுதிக்குள் அம்மருந்து சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

