கோலாலம்பூர், திசம்பர் 1:-
நாளை முதல் அலுவலக வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை ஊழியர் சேமநிதி வாரியத்தின் அனைத்துக் கிளைகளும் திறந்திருக்கும்.
செயல்படும் நேரத்தில் கூடல் இடைவெளியையும் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கும் எஸ்.ஓ.பி.யையும் கடைபிடிக்கும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
சேநநிதி வாரியத்தின் முகப்புச் சேவைகளைப் பெற விரும்புவோர் முன்னதாகவே இயங்கலையில் www.kwsp.gov.my/janjitemu முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அவ்வாரியம் தெரிவிவித்திருந்தது.
மேலதிகத் தகவல்களஐத் தெரிந்துகொள்ள 03-8922 6000 எனும் தொலைப்பேசி எண்கள் வாயிலாகவோ அல்லது www.kwsp.gov.my இணையத்தளம் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

