Site icon அநேகன்

அடுத்தாண்டுக்கானச் செயல்திட்டங்களை எல்லா அமைச்சுகளும் இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் ! – தலைமைச் செயலாளர்

புத்ராஜெயா, திசம்பர் 1:-

அடுத்தாண்டுக்கான மேம்பாட்டுத் திட்டங்களஐ திசம்பர் 31க்குள் அனைத்து அமைச்சுகளும் நாட்டின் தலைமைச் செயலாளர் அலுவலகத்திடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளன.

அந்தத் திட்ட வரைவில் குத்தகைக்கான தேதி, செயல்திட்டங்களின் முன்னேற்பாடுகள் தொடங்கப்படும் நாள் உட்பட தெரிவிக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) டத்தோ ஶ்ரீ முஸ்தாபா முகம்மாட் தெரிவித்தார்.

இந்த முடிவை நாட்டின் தலைமைச் செயலாளர் தான் ஶ்ரீ முகம்மாட் ஸூகி அலி அவர்கள் தலைமையேற்ற 2021ஆம் ஆண்டுக்கான மேம்பாட்டு செயல் திட்ட வரைவு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

“நின்றுபோன திட்டங்கள் யாவும் உடனடியாகத் தொடரவும் புதியத் திட்டங்கள் யாவும் வெகு விரைவில் நிறைவடையச் செய்யவும் இது வழிவகுக்கும். மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் கொடுப்பக்கட்ட சில தளர்வுகள் மேம்பாட்டு செலவுகளை விரைவு படுத்தி அதனை செயல்படுத்த உதவி புரிந்தது.“

அடுத்தாண்டுக்கான செயல் திட்டங்களுக்கான தர மேம்பாடுகளையும் தளர்வுகளையும் கண்டறிய ஏதுவாக இக்கூட்டம் அமைந்திருந்தது.

2021க்கான பட்ஜெட்டில் மேம்பாட்டுச் செலவிக்கு ரி.ம. 69 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 45 விழுக்காடு செலவுகள் தொடரப்பட வேண்டியத் திட்டங்களுக்கும் 55 விழுக்காடு புதியத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும்.

நின்று போன 3,834 திட்டங்களைத் தொடருவதில் சிக்கல் இல்லை. ஆனால், புதிதாகத் தொடங்கப்படவுள்ள 2,558 திட்டங்களும் சீராக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு என டத்தோ ஶ்ரீ முஸ்தாபா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version