Site icon அநேகன்

ஊழியர் சேமநிதி வாரியத்தின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது !

அலோர் ஸ்டார், திசம்பர் 2:-

ஊழியர் சேமநிதி வாரியத்தின் அலுவலகங்கள் பக்கம் மக்களின் தற்போதைய கவனம் திரும்பியுள்ளது. ஐ-அக்கவுண்ட், ஐ-சினார் பதிவுக்காக சேமநிதி வாரிய அலுவகங்களுக்கு மக்கள் படையெடுத்துள்ளனர்.

அலோர் ஸ்டார் ஊழியர் சேமநிதி வாரிய அலுவலகம் காலை 8.00 மணி தொடங்கி மக்கள் கூட்டத்தால் நிறம்பியுள்ளது.

ஐ-சினார் திட்டத்தின் வழி தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

ஊழியர் சேமநிதி வாரிய அலுவலகங்கள் நாடு முழுவதும் வார நாட்களில் காலை 8.00 மணி முதல் 4.30 மணி வரை திறந்திருக்கும் எனும் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் சேமநிதி வாரியத்தின் வளாகத்தில் திரண்டுள்ளனர்.

கடந்த அக்தோபர் மாதம் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குட்பட்டு மூடப்பட்ட கோலாலம்பூர், இலாபுவான், சபா ஆகிய இடங்களிலும் ஊழியர் சேமநிதி வாரிய அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

கோல திரங்கானு ஊழியர் சேமநிதி வாரிய அலுவலகத்திற்கு ஐ-அக்கவுண்ட் பதிவு செய்யவும், பதிவு செய்தவர்கள் அதனைச் சரி பார்க்கவும் வந்துள்ளனர்.

மற்ற அலுவல் கொண்டவர்கள் இயங்கலையில் முன் பதிவு செய்து கொண்டு அதற்கேற்ப ஊழியர் சேமநிதி வாரிய அலுவகத்துக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அங்லு வருபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளாப்பட்டுள்ளனர்.

Exit mobile version