Site icon அநேகன்

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறையவில்லை ! – சுகாதார இயக்குநர்

கோலாலம்பூர், திசம்பர் 2:-

மலேசியாவில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் இருவர் மரணம் அடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 851 பேருக்குப் புதிதாக இந்நோய்த்தொற்று கண்டாறியப்பட்டுள்ள வேளையில் இதனால் பாதிக்கப்ப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68,020-ஐ எட்டியுள்ளது.

இது வரையில் 122 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 47 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 658 பேர் குணமடைந்துள்ள வேளையில் சுமார் 56,969 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்றையச் செய்தியாளார் சந்திப்பில் வெளியிட்டார்.

Exit mobile version