டெல்லி, திசம்பர் 3:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 பெருந்தொற்றால் 35,551 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,534,964-ஆக உயத்ந்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 526 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 138,648 -ஆக உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 40,726 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,973,373 -ஆக உள்ளது. எனவே தற்போது 422,943 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக அந்நாட்டு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- தினகரன்

