Site icon அநேகன்

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு ஜோகூர் உணவுக்கூடை அனுப்பியது

இஸ்கண்டார் புத்ரி, திசம்பர் 3:-

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் சிங்கப்பூர் – மலேசியா எல்லை மூடப்பட்டிருக்கும் வேளையில் அங்கு சிக்கித் தவிக்கும் மல்லேசிய மக்களுக்கு ஜோகூர் மாநில அரசு உணவுக் கூடையை அனுப்பியுள்ளது.

இந்த முன்னெடுப்பு ஜோகூர் மாநிலத்தின் 2021க்கான் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததாக மாநில முதல்வர் டத்தோ ஹஸ்னி முகம்மட் தெரிவித்துள்ளார்.

கட்டங் கட்டமான சுமார் 1000 உணவுக் கூடைகளை சிங்கப்பூரில் இருக்கும் மலேசியர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் அந்த அரசாங்கத்து ஏற்பாடும் செலவுகளில் ஒரு பகுதியைக் குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக ரி.ம. 30,000 மதிப்புள்ள சுமார் 300 உணவுக் கூடைகளை சிங்கப்பூரிக்கு ஜோகூர் மாநில அரசு உடனடியாக அனுப்பியுள்ளது. மீதத்தை கட்டம் கட்டமாக அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பகிர்ந்தளிப்பை சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்தின் உதவியுடன் செய்யப்படும். அத்தூதரகம் தான் பகிர்ந்தளிப்பு மையமாக அமையும்.

வழங்கப்படவுள்ள் உணாவுக் கூடையில் விரைவு உணவுப் பொருட்களோடு சுகாதாரப் பொருட்களும் போர்வையும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இன்று காலை சுல்தான் இஸ்மாயில் கட்டட வளாகத்தில் இருந்து முதற்கட்டமாக உணவுக் கூடைகள் அனுப்பப்படும் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று அதிகரிப்பால் இரு நாடுகளூக்கும் இடையிலான எல்லைப்பாதைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் மலேசியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் போனது. மேலும், அங்கு வாழ்க்கைச் செலவினங்கள் மிகவும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பலர் அங்குள்ளப் பூங்காக்களின் நாற்காலிகளில் உறங்குவதும், குளிப்பதற்குப் பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவதும் சிலர் சூராவ்களிலும் வேலை இடங்களிலும் தங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்த உதவித் திட்டத்திற்கு கரம் கொடுத்த அனைத்து அரசாங்க இலாகாக்களுக்கும் அரசு சாரா இயக்கங்களுக்கும் தமது நன்றியை ஹஸ்னி தெரிவித்துக்கொண்டார்.

Exit mobile version