Site icon அநேகன்

விவசாயம் தொடர்பான 3 சட்ட மசோதாக்கள் : எட்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது

டில்லி, திசம்பர் 3:

இந்திய மத்திய அரசாங்கத்தின் விவசாயம் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை எதிர்த்து, இந்திய தலைநகர் டில்லியின் எல்லைப் பகுதியில் எட்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு, ஆயிரக்காணக்கான மக்கள், தேசிய நெடுசாலையில் ஒன்று கூடியுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்ப மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பியும் வருகின்றனர்.

இந்த நிலையில், 32 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.

விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாய அமைப்புகளிடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது, மத்திய அரசின் நோக்கம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தச் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த போராட்டித்திற்கு ஆதரவு அளிக்கும் வைகையில், வரும் நாட்களில் லாரி ஓட்டுனர்களும் வேலை நிறுத்தம் செய்து போராட்டங்களில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version