Site icon அநேகன்

பேரா அரசியல் நெருக்கடி மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா ?

ஈப்போ, திசம்பர் 4:-

பேரா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி கெடா, ஜோகூர், சபா போன்ற மாநிலங்களிலும்றாதன் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சில கட்சிகளின் ஒப்புதலின் அடிப்படையில் உருவாக்கப்ப்ட்டுள்ள மத்திய அரசாங்கத்தின் உறுதித் தன்மையைத் தடுமாறாச் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காலம் முடிந்தவுடன் உடனடியாக 15ஆம் பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசின் உறுதிப்பாடு வழங்கியுள்ளார்.

அரசியல் இலாப நோக்கத்தையும் சுயநலத்தையும் ஒதுக்கிவிட்டு மக்கள் நலனை முன்னிறூத்தி ஆட்சி புரிய வேண்டும் என்ற மாமன்னர் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் வழங்கிய அறிவுறை காணாமல் போனதாகத் தெரிகிறது.

“கோவிட்-19 நாட்டைத் தாக்கும் காலத்தில் சில அரசியல் தலைவர்கள் மத்திய அரசைக் கவிழ்ப்பதிலேயே குறியாக இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று பேரா மாநில அரசங்கமும் அவ்வலையில் சிக்கியுள்ளது.“

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, அரசியல் இலாபம், சுயநலம், பதவி இவற்றை முன்னிறுத்திய கட்சியையும் நபர்களையும் கண்டிப்பாக பொதுமக்கள் தண்டிக்கும் காலம் வரும்.

சட்டமன்றக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது இன்று பேரா மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமு பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறிவிட்டார்

10 வாக்குகள் அவரை ஆதரிக்கும் தரப்பில் இருந்தாலும் 48 வாக்குகள் அவருக்கு எதிராக அமைந்தன.

ஆனால், நம்பில்லையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த பெங்காலான் பாரு சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் மானாஃப் ஹாஷின் கடந்த 18 நவம்பர் 2020ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் பேரா மாநில முதல்வரும் செண்டரியாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமு இதர சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தார் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version