Site icon அநேகன்

பேரா மாநிலத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு நாடாளுமனறத்திலும் வாக்கெடுப்பு நடத்துங்கள் ! – அம்னோ , ஜ.செ.க தலைவர்கள்

கோலாலம்பூர், திசம்பர் 4:-

பேரா மாநில சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் போல் தேசிய நிலையில் நாடாளுமன்றத்திலும் நடத்த வேண்டும் என்ற கருத்தை சில அரசியல் தலைவர்கள் வரவேற்கிறார்கள்.

தற்போதைய தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நிலைத்தன்மையை அள்விடும் பொருட்டு அம்னோ, ஜ.செ.க. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இது போன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் எனக் கருதுகிறார்கள்.

மத்திய அர்சாங்கத்தின் நிலைத் தன்மை குறித்த பல கேள்விகலுக்கு விடையளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர நஸ்ரி அஸிஸ் தெரிவித்துள்ளார்.

2021 பட்ஜெட் தொடர்பான விவாதங்களில் எதிர்க்கட்சியினரைத் தோற்கடித்திருந்தாலும் இந்த அரசாங்கம் குறித்த விமர்சனம் ஓய்ந்தபாடில்லை. எனவே, ஒரு வாக்கெடுப்பை நடத்திவிடுவது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பேரா சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ட்த்தோ ஶ்ரீ அகமாட் ஃபைஸால் அஸூமுவுக்கு ஆதரவாக 10 ஓட்டுகள் கிடைத்த நிலையில் ஏனைய 48 வாக்குகள் அவருக்கு எதிராக அமைந்தன.

அந்த வாக்கெடுப்புப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் தெரிவிக்கையில், நாடாளுமன்ற அவைத் தலைவர் அசஹார் ஹாருன் பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தை ஓர் எடுத்துக்காட்டாகப் பார்க்க வேண்டும் என்றார்.

பேரா மாநில சட்டமன்றத்தில் நடத்தப்படும்போது, ஏன் நாடாளுமன்றத்தில் நட்த்த முடியாது என்றக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மற்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன்னர் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மலேசியா கொலைப்புற அரசாங்கத்தைக் கொண்டுள்ளது எனும் இழுக்கானப் பெயரைத் துடைத்தொழிக்க இது உதவும் என்றார்.

முன்னதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவிக்கையில், பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தனிப்பட்ட விவகாரங்களையும் அரசாங்க விவகாரங்களுக்குப் பின்னர் தான் கவனிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்ப்பினர் தெங்கு ரஸாலீக் ஹம்ஸாவும் அம்னோவின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடியும் ப்பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் வாக்கெடுப்பு நட்த்தவும் பரிந்துரைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமும் வாக்கெடுப்பும் கொண்டு வரப் படுமா என நஸ்ரியிடம் கேட்ட பொழுது, அது மேல்மட்ட தலைமையைப் பொறுத்தது எனக் கூறிய அவர், “என்னைப் பொறுத்தமட்டில் ஏன் கொண்டு வரக்கூடாது?” என பதிலளித்தார்.

தற்போது 112 நாடாளூமன்ற உறுப்ப்பினர்கள் பிரதமர் முகிதீன் யாசினுக்கு முழு ஆதரவை வழங்குகிறார்கள். அவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். மத்திய அரசு தரப்பில் நாங்கள் உறுதியாகத்தான் இருக்கிறோம்.  

பேரா மாநிலத்தில் அகமாட் ஃபைசால் அசுமுவுன் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், இது அம்னோ அகமாட் ஃபைசால் மீதுள்ள திருப்தியின்மையால் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் ஊழியர் சேமநிதி வாரியத்தின் 1ஆம் கணக்கில் இருந்து அதன் உறுபினர்கள் பணம் எடுக்கும் விவகாரம் தொடர்பில் மத்திய அரசு மீது அம்னோவுக்கு வருத்தம் உண்டு.

இவ்விவகாரத்தில் வைக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அம்னோவுக்கு உடன்பாடில்லை.

ஆனால், இப்போது ஊழியர் சேமநிது வாரிய பணம் எடுப்பது என்பதே அம்னோவின் வலியுறுத்தலால்தான் நடந்துள்ளது. இல்லையென்றால் அவர்கள் 2021 பட்ஜெட்டை ஆதரிக்க மாட்டார்கள் எனும் நிலைப்பாட்டில் நின்றார்கள்.

அம்னோ தலைவர்கள் இந்த ஐ-சீனார் விவகாரம் குறித்து நிதியமைச்சரிடம் சந்திப்பு நடத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version