Site icon அநேகன்

பேரா மாநில புதிய ஆட்சியமைப்பில் பாஸ் இடம்பெறாது !

ஈப்போ, திசம்பர் 4:–

தற்போது பேரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் நெருக்கடியின் அடிப்படையில் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் இருந்து பாஸ் கட்சி பின் வாங்கியுள்ளது என அக்கட்சியின் கௌரவச் செயலாளார் தக்கியுடின் ஹசான் கூறியுள்ளார்.

இன்று காலை டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமு மாநில முதல்வராக பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெறத் தவறியதன் தொடர்பில் புதிய ஆட்சி அமைக்கும் கூட்டணியின் பாஸ் இடம்பெறாது என தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

அகமாட் ஃபைசாலுக்கு ஆதரவாக அவரின் (பெர்சத்து) கட்சியும், பாஸ், சுயேட்கை சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள்.

அனைத்து நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் 25 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து அகமாட் ஃபைசால் அசுமுவின் அரசாங்கத்தைக் கவிழ்த்தனர்.

இது வரையில் தேசியக் கூட்டணி உறுப்புக் கட்சிகளான அம்னோ, பாஸ், பெர்சத்து ஆகியன தங்களின் கோட்டையைத் தக்க்கவைத்துக் கொல்ளுமா அல்லது புதிய கூட்டணி உருவாகுமா என சரியாகக் கூற முடியவில்லை.

பேரா மாநிலத்தில் அம்னோவுக்கும் ஜ.செ.க.வுக்கும் தலா 25 , 16 சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன.

அமானாவுக்கு 5 இடங்கள், பெர்சத்துவுக்கு 6 இடங்கள், பாஸ் பட்சிக்கு 3 இடங்கள், பி.கே.ஆர் கட்சிக்கு 3 இடங்கள், சுயேட்கைக்கு 1 இடம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version