Site icon அநேகன்

கோவிட்-19 : இன்று யாரும் மரணமடையவில்லை!

கோலாலம்பூர், திசம்பர் 4:-

மலேசியாவில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் யாரும் மரணம் அடையவில்லை. மரண எண்ணிக்கை இது வரையில் 376 ஆக நிலைத்துள்ளது.

இன்று மட்டும் 1,141 பேருக்குப் புதிதாக இந்நோய்த்தொற்று கண்டாறியப்பட்டுள்ள வேளையில் இதனால் பாதிக்கப்ப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70,236-ஐ எட்டியுள்ளது.

இது வரையில் 129 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 53 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 1,144 பேர் குணமடைந்துள்ள வேளையில் சுமார் 59,061 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்றையச் செய்தியாளார் சந்திப்பில் வெளியிட்டார்.

Exit mobile version