ஜெனீவா, திசம்பர் 5:-
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் 6 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கோவிட்-19 தொற்றை உலக நெருக்கடியாக குறிப்பிட்டு உள்ளார்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில்,
இந்தத் தொற்றுக்குக் கிடைக்கும் தீர்வானது, உலகப் பொது பொருளாகக் கொண்டு சமமாகப் பகிரப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தனிப்பட்ட நபருக்கானப் பொருட்களாகப் பயன்படுத்தப்படக் கூடாது
எனக் கூறினார்.
உலக நாடுகளின் தலைவர்கள் இந்தத் தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையாக கோவிட்-19 தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனையில் அண்மைய வாரங்களில் வரவேற்கத்தக்க முடிவுகள் காணப்படுகின்றன. இவை சுரங்க முடிவில் காணப்படும் வெளிச்சம் போல் பிரகாசமுடன் உள்ளது. கோவிட்-19 தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை நாம் தொடங்க வேண்டும்.
கோவிட்-19 தடுப்பு மருந்து தேவைகளுக்கான நெருக்கடியில், பணக்காரர்களும், அதிகாரத்தில் இருப்பவர்கலும், ஏழை, விளிம்பு நிலையில் இருப்பவர்களை மிதிக்கக் கூடிய உலகை நாம் ஏற்க கூடாது என்று கூறியுள்ளார்.
கோவிட்-19 தொற்றைப் போன்று அடுத்தத் தொற்று ஏற்படாமல் இருக்க, அதனைத் தடுக்கும் வகையில் தயார்படுத்திக் கொள்ள உலகத் தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
நன்றி – தினத்தந்தி

