Site icon அநேகன்

பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் கிந்தா அரண்மனையில் இருந்து வெளியேறினர்

ஈப்போ, திசம்பர் 5:-

இன்று காலை 11.35 அளவில் பேரா மாநிலத்தின் 3 நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கிந்தா அரண்மனை வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

அமானா கட்சியின் தலைவர் டத்தோ அஸ்முனி அவி, பேரா மாநில பி.கே.ஆர். கட்சியின் தலைவர் ஃபர்ஷா வாஃபா சல்வாடோர் ரிஸால் முபாரக், பேரா ஜ.செ.க.வின் தலைவர் ஙா கோர் மிங் ஆகியோர் தங்கள் கார்களில் அரண்மனையை விட்டு வெளியேறினர்.

தற்போது பேரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து அம்மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவை நேரில் சந்தித்து முடிவுகள் எடுப்பதற்காக அவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.

இவர்கல் வெளியேரும் போது எவ்வித தகவலையும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கவில்லை.

இந்த வரிசையின் பின்னாலில் இன்னொரு காரும் இணைந்தது. அது பேரா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர்ர் டத்தோ சராணியின் கர் என நம்பப்படுகிறது.

Exit mobile version