Site icon அநேகன்

பேரா மாநில புதிய முதல்வர் : இன்னும் கேள்விக் குறியே !

ஈப்போ, திசம்பர் 5:-

காலையில் பேரா ஆட்சியாளரைச் சந்தித்த அம்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், யார் பேராவின் புதிய முதல்வர் எனும் முடிவை இன்னும் எடுக்க வில்லை. பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணியின் மூன்று உறுப்புக் கட்சிகளான ஜ.செ.க., அமானா, பி.கே.ஆர் ஆகியோருடன் அம்னோ தலைவரும் அச்சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிய வருகிறது

கிந்தா அரண்மனையின் பேச்சாளர் டத்தோ ஶ்ரீ முகம்மாட் அன்னுவார் ஸைனி, இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கையில், பேரா மாநில அரசாங்கத்தை முடிவு செய்யக்கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் வருகையையும் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா ஏற்றுக் கொண்டதாகவும் எந்தக் கட்சி அல்லது கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது குறித்து இன்னும் அவர்களுக்குள்ளேயே பேசி வருவதாகவும் தெரிவிகப்பட்டதாக கூறினார்.

இஃது அந்தந்த அரசியல் கட்சிகளின் விவகரம் என்பதால் அரண்மனைக்கும் அதுக்கும் தொடர்பில்லை. இருந்தாலும், மிகச் சுமூகமாவும் விரைவாகவும் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும்படி சுல்தான் அறிவுறுத்தி இருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ முகம்மாட் அன்னுவார் ஸைனி குறிப்பிட்டார்.

இன்று வருகை புரிந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளையும் சுல்தான் அவர்களின் வருகையை ஏற்றுகொள்ளாவிருப்பதாகவும் கூறினார்.

நாளை காலை 10.00 மணி அளவில் சுல்தான்னை அம்னோ தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி சந்திக்கவிருப்பதாகவும் இன்று வேறெந்த அரசியல் தலைவர்களையும் சுல்தான் சந்திப்பதாக அட்டவணையிடப்பட்டவில்லை எனவும் அவர் கூறினார்.

Exit mobile version