ஆலோர் காஜா, திசம்பர் 5:-
தொடக்கப்பள்ளிகளுக்கான யூ.பி.எஸ்.ஆர். தேர்வை கல்வியமைச்சு நீக்குவது தொடர்பான ஆய்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.
வெகு விரைவில் அவ்விவகாரம் குறித்த அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு வரும் என துணைக் கல்வி அமைச்சர் முஸ்லிமின் யாஹ்யா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இல்லாமல் போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இன்று மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் சிறப்பான யூ.பி.எஸ்.ஆர். தேர்ச்சி பெற்ற 148 மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு நிகரான இன்னொரு தேர்வு முறை குறித்த எந்த ஆய்வையும் கல்வி அமைச்சு இது வரை மேற்கொள்ளவில்லை.
இருந்தாலும், இடைநிலைக் கல்விக்கான 5 சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வியைத் தொடரும் விவகாரத்தைச் சுட்டிக் காட்டிய அவர், மாணவர்கள் தொடர்ச்சியான வகுப்பறைச் சோதனைகள் முறையில் மதிப்பீடு செய்யப்படுவர் என விளக்கினார்.

