Site icon அநேகன்

கோவிட்-19 தடுப்பூசி குத்தகை : அரசாங்கம் முழு விவரத்தை வெளியிட வேண்டும் ! – அன்வார் இப்ராகிம்

பெட்டாலிங் ஜெடா | பிப்பரவரி 3 :-

முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2020இல் ஊழல் குற்றங்கள் தொடர்பான தர வரிசைப் பட்டியலில் மலேசியா ஆறு இடங்கள் கீழ் இறங்கி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

விதிக்கப்பட்டுள்ள அவசர நிலையால் பிரதமர் நாடாளுமன்றத்தைத் தாண்டி தன்னிச்சையாக சட்டங்களை அங்கீகரிக்க முடியும். அரசாங்கத்தின் மிகப்பெரிய தடுப்பூசி குத்தகை நேரடி பேச்சுவார்த்தையின்படி வழங்கப்பட்டுள்ளது தற்போது கேள்விக்குறியாகி  உள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி வாங்கப்பட்ட விவகாரத்தில் அந்தக் குத்தகை தொடர்பான முழு விவரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிப்பரவரி 27 ஆம் நாள் கோவிட்-19 தடுப்பூசி கிடைத்து விடும் எனற அறிவிப்பை மட்டும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.

ஆனால், யார் யாருக்கெல்லாம் முதலில் வழங்கப்படும், எவ்வளவு வழங்கப்படும். அதன் செலவு என்ன, குத்தகை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

 அவசர நிலை என்ற ஆயுதத்தை வைத்து தற்போது பல முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டு வருகிறது.

இது பெரும் வருத்தத்தையும் பயத்தையும் தருகிறது காரணம் இவ்விவகாரம் நாட்டின் நிர்வாகத்தை உட்படுத்தியது என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

Exit mobile version