கோலாலம்பூர் | பிப்பரவரி 3:-
ஜாலான் சுல்தான் யாஹ்யா பெட்ராவில் அமைந்துள்ள காவல்துறை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் 264 மாணவர்களுக்கு இன்று கோவிட்-19 தொற்று கண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதலே மேற்கொண்ட பரிசோதனைக்குப் பிறகு அவ்வெண்ணிக்கை 382ஆக உயர்ந்துள்ளது.
புக்கிட் அமான் நிர்வாக இயக்குனர் டத்தோ இரம்பி டின் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், மேலும் 46 பணியாளர்களுக்கும் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இவ்வேள்ளையில் பயிற்சி மையத்தில் இருந்து உள்ளேயும் வெளியேயும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்துப் பயிற்சி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இச்சூழலில் அரச மலேசியக் காவல்துறை சுகாதார அமைச்சுடன் மிக அனுக்கமாக ஒத்துழைத்து வருகிறது. சிகிச்சைக்காக செர்டாங் MAEPS தனிமைப்படுத்தல் மையத்திற்கு கோவிட்-19 தொற்று கண்டிருப்பவர்களைக் கொண்டு செல்வது குறித்து தற்போது கலந்தாலிசிக்க்ப்பட்டு வருகிறது.
முன்னதாகவே கோவிட்-19 தொற்று கண்டிருந்த பயிற்சி மாணவர்கள் தனிமைப்படித்தல் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். கூடிய விரைவில் தொற்று கண்ட மற்றவர்களும் தனிமைப்படித்தல் மையத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என இரம்லி டின் கூறினார்.
இக்காலக்கட்டத்தில் காவல்துறை பயிற்சி மையத்தில் கிருமிநாசிணி தெளிக்கும் பணி மேற்கொள்ளாப்பட்டு வருகிறது.
கடந்த சனவரி 27ஆம் நாள் இதே ஜாலன் சுல்தான் யாஹ்யா பெட்ராவில் வேலையிடம் தொடர்பான கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. ஆனால், குறிப்பிட்டு எந்த இடம் என அது விவரிக்கவில்லை.
அதற்கு முந்தைய நாளில் கோவிட்-19பரிசோதனையை மேற்கொண்டிருந்த 58 வயது மிக்க ஒருவருக்கு நோய்த்தொற்றூ கண்டிருப்ப்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து இங்கு முதல் தொற்று மையப் புள்ளி அறிவிக்கப்பட்டிருந்தது.

