Site icon அநேகன்

கோவிட்-19 : வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட வில்லை ! – சீனா

பெய்ஜிங் | பிப்பரவரி 3:-

சீனாவின் வூகான் நகரில் உருவாகிய கோவிட்-19 பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இன்னமும் அதிலிருந்து மீளமுடியாத நிலை உருவாகியுள்ளது.

அந்த கிருமி வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியதை அடுத்து, சீனா அதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் அக்கிருமியின் உருவாக்கமும் தோற்றமும் குறித்து கண்டறிய உலக சுகாதார அமைப்பு வல்லுநர் குழுவை சீனாவுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து அதன் தொடர்பான விசாரணையை அக்குழுவினர் தொடங்கினர்.

அங்கு முதலில் அக்கிருமி பரவிய இடங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து சீன விஞ்ஞானிகளிடம் அவர்கள் தகவல்களை கேட்டறிந்துள்ளனர்.

இதனிடையே, நேற்று வூகானில் உள்ள விலங்குகள் சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்தொற்று நோய், வெளவால்கள் மூலம் எவ்வாறு, தென்மேற்கு சீனா மக்களுக்கு பரவியது என்பதை இந்த விலங்குகள் சுகாதார நிலையம் கண்டறியும் என்று அப்புலனாய்வுக் குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்று உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழுவினர் வுகானில் உள்ள ஆய்வகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் பலத்தப் பாதுகாப்புடன் கார்களில் ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version