கோலாலம்பூர் | பிப்பரவரி 3 :–
நாளை 4-2-2021ஆம் நாள் கொண்டாடப்படவிருக்கும் மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவரருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் 53-வது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டரசுப் பிரதேச ம.இ.கா. தலைவர் டத்தோ எஸ் இராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவையை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்பட்டு வரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சரவணன் பல்லாண்டு காலம் வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் கூட்டரசு பிரதேச ம.இ.கா.வின் பிரதிநிதிகளும் தங்களின் வாழ்த்தை டத்தோ ஶ்ரீ சரவணனுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.
செனட்டர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரனின் தலைமையில் முன் சென்று கொண்டிருக்கும் கட்சிக்கு துணை நின்றுஅவருக்குத் தோல் கொடுக்கும் டத்தோ ஶ்ரீ சரவணன் பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும்.
தொடர்ந்து மனித வள அமைச்சராக அவர் அமைச்சரவையில் வீற்று பல்வேறு செயல் திட்டங்களை நாட்டும் நம் இந்திய மக்களுக்கும் அவர் முன்னெடுக்க வேண்டும். எல்லா காலத்திலும் அவரின் முன்னேற்றத் திட்டங்களுக்கு கூட்டரசுப் பிரதேச ம.இ.கா. துணை நிற்கும் என்பதனையும் டத்தோ எஸ். இராஜா தெரிவித்துக் கொண்டார்.

