Site icon அநேகன்

கோவிட்-19 தடுப்பூசி : ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ! – தியோ நீ சிங்

Deputy Education Minister Teo Nie Ching said the ministry has plans to recruit more interim teachers for special needs education in national schools. Starpix by Low Lay Phon.

கூலாய் | பிப்பரவரி 5 : –

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும் தரப்பினர் பட்டியலில் ஆசிரியர்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் கல்வித் துணையமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள 3 கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக 500,000 முன்களப் பணியாளார்கள் முதன்மைப்படுத்தப்பட உள்ளனர். இந்த நடவடிக்கை மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனைத் தவிர்க்க முடியாவிட்டாலும், அதற்கானத் தாக்கம் மிக அதிகம்.

கல்விக் கால நேரம் மட்டும் இதனால் வீணாகாமல், பள்ளிக் கூடங்களைத் தொடர்புப் படுத்திய இதர விவகாரங்களுக்கும் அதன் தாக்கம் நீடிக்கிறது. குறிப்பாக பி40 சமுகத்தினருக்கான கூடுதல் உணவுத் திட்டம் RMT, பூர்வக் குடியினருக்கான உதவிகள் போன்றவைகளை நம்பியிருக்கும் குடும்பத்தினரையும் பாதிக்கிறது.

இல்லிருப்புக் கற்றல் முறையைக் கடந்த ஓராண்டு முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அதன் தயார் நிலை பின் தங்கியே உள்ளது.

இக்காலக்கட்டத்தில் நடப்புக்கு வந்துள்ள இல்லிருப்புக் கற்றல் தரமாக இருக்க 3 முக்கியக் கூறுகள் கவனிக்கப்பட வேண்டியவை. இல்லிருப்புக் கற்றலுக்கானக் கருவிகள், தடைபடாத அதிநேக இணையச் சேவை, கல்வித் தொலைக்காட்சியில் போதுமானப் பாட உள்ளடக்கங்கள் ஆகியன மிக முக்கியமானவை.

எனவே, இன்னும் மேம்பாடு காணப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வேண்டியக் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதற்கு முன்னர் சனவரியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தொற்றுப் பரவல் நேர்ந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இவ்விவகாரம் பாதுகாப்பு குறித்த கேள்விகளைப் பெற்றோரிடத்தில் எழுந்துள்ளன. பள்ளிக் கூடங்களுக்குத் தங்கல் பிள்ளைகளை அனுப்பும்போது பெற்றோர்கள் மிகுந்த நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஆகவே, ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுவது மிக அவசியமானது. அது முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த நடவடிக்கையால் பள்ளிக் கூட வளாகம் பாதுகாப்பானக் கல்விச் சூழலுக்கு உறுதிப்பாடு அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

எனவே, ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுவது முதன்மையாக்கப்பட வேண்டும். நாட்டின் விலையுயர்ந்த கருவூலமாக ஆசியர்கள் கருதப்படுகிறார்கள். எனவே, இது போன்ற காலத்தில் அவர்களின் மதிப்பை நாம் மறந்து விடக் கூடாது எனக் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் கூறியுள்ளார்.

Exit mobile version