Site icon அநேகன்

85 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்

மந்தின் | பிப்பரவரி 12:-

சேவைக்கு வயது வரம்பு தேவையில்லை. எந்த வகையிலும் யார் வேண்டுமானாலும் சேவையாற்றலாம். அதற்கு போர்ட்டிக்சனை சேர்ந்த பிரவின் உதாரணமாக விளங்குகிறார் என்று டத்தோஸ்ரீ ஆர்.ஜெயந்திரன் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மந்தின் வட்டாரத்தைச் சேர்ந்த கிராமத்து மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுமார் 85 குடும்பங்களுக்கு சமையலுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை பிரவின் தனது நண்பர்களுடன் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த 85 குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்பளிப்பாக வழங்கினார்.
முதியவர்கள், கோவிட்-19 பாதிப்பால் வருமானமிழந்தவர் கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என உதவி தேவைப்படும் 85 குடும்பங்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இன்றைய இளைஞர்கள் பிரவினை ஓர் எடுத்துக்காட்டாக முன்னெடுக்க வேண்டும். இது போன்ற இளைஞர்களுக்கு எல்லா நிலையிலும் தாம் ஆதரவளிப்பதாகவும் ஜெயந்திரன் தெரிவித்தார்.

போர்ட்டிக்சன் பகுதியில் பிரவின் உணவு வங்கி ஒன்றை நிறுவி அதன் வாயிலாக தம்மால் இயன்ற சேவைகளை வழங்கி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version