Site icon அநேகன்

கோவிட்-19 தடுப்பூசி : முதல் நபராகப் போட்டுக் கொள்கிறார் பிரதமர்

கோலாலம்பூர் | பிப்பரவரி 12

பிப்பரவரி மாத இறுதியில் கோவிட்-19 தடுப்பூசி மலேசியாவுக்கு விநியோகிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் முகிதீன் யாசிஉக்கு அதனை முதலில் செலுத்தப்படும்.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சரும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான கைரி ஜமாலுதீன் இவ்விவகாரத்தை உறுதிப்படுத்தினார்.

“ஃபைசர் (Pfizer) நிறுவனத் தயாரிப்பான கோவிட்-19 தடுப்பூசி போட்ட முதல் நபராகப் பிரதமர் இருப்பார் என்பதை இங்கு நான் உறுதிப்படுத்துகிறேன். அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தவே முதல் ஆளாக அந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறார் என பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

கடந்த 4ஆம் தேதி, இம்மாத இறுதியில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கும் என பிரதம்மர் கூறினார். நாட்டின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு  (26.5 மில்லியன் பேர்) இலவசமாக மூன்று கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது.

இம்மாதம் முதல் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் வரை முதல் கட்டத் தடுப்பூசி போடப்படும்.

அதில் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் நேரடியாகக் களாத்தில் இறங்கியுள்ள 500,000 முன்களப் பணியாளர்கள் உட்படுத்தப்படுவார்கள்.

இரண்டாவது கட்டமாக ஏப்பிரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 60 வயதுக்கும்  மேற்பட்ட மூத்தக் குடிமக்கள், அதிக  ஆபத்தான நோய் கொண்டவர்கள், இதய நோய் கொண்டவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்குச் செலுத்தப்படும்.

மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாண்டு மே மாதம்  முதல் அடுத்தாண்டு பிப்பரவரி மாதம் வரை கோவிட்-19 த்டுப்பூசி செலுத்தப்படும்.

மற்ற வளர்ந்த நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் ஒப்பிடுகையில், மலேசியா கோவிட்-19 தடுப்பூசியைச் சற்று தாமதமாகப் பெற்றது என்ற குற்றச்சாட்டை கைரியின் முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில், மலேசியா ஓராண்டு முழுவதும் ஒரு திறமையான, பயனுள்ள நோய்த்தடுப்புத் திட்டத்தைத் திட்டமிடுவதில் அதிகக் கவனம் செலுத்தியது. அதனால் தான் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி இந்த மாத இறுதியில் பெறப்படும் எனவும் கைரி சொன்னார்.

இந்தோனேசியாவுக்குச் ‘சினோவாக்’ தடுப்பூசி ஆரம்பத்திலேயேக் கிடைத்து விட்டது, அதற்கு என்ன காரணம்ம் என்றால், அந்நாடு ஒரு சோதனைத் தளமாக திகழ்ந்தது; அதே நேரத்தில், சிங்கப்பூர் உற்பத்தியாளரான ‘ஃபைசர்-பயோஎன்டெக்’ நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது.

இதன் காரணமாக, அந்த இரு நாடுகளும் தயாரிப்பாளர்களிடமிருந்து முன்னுரிமை பெற்றதாக கைரி விளக்கமளித்தார்.

மலேசியா தடுப்பூசி விவகாரத்தில் மிகவும் தாமதிக்கவில்லை என்று நான் நம்புகிறேன். வாக்கு கொடுத்தபடி நிறைவேற்றியுள்ளோம்.

தடுப்பூசியை நாம் பெறும்போது அதற்கானசெயலாக்கத் திட்டத்தை உருவாக்க முடியும். அதன் படி திறமாக செயல்பட முடியும்.

மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஊசி போட முடியவில்லை என்றால் நிறைய தடுப்பூசிகள் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று கைரி ஜமாலுதின் கூறினார்.

Exit mobile version