Site icon அநேகன்

இசுலாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் இயங்கலாம் ! அதிகப்படியாக 30 பேருக்கு மட்டுமே அனுமதி !

கோலாலம்பூர் | பிப்பரவரி 13:-

இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் இசுலாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் திறக்க அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு அமைச்சின்படி, ஒரு நேரத்தில் அதிகப்பட்யாக 30 பேருக்கு மட்டுமே அந்த வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

 வழிபாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முன்பு வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசிணி தெளிக்கப்பட வேண்டும்.

முடிவு செய்யப்பட்ட நேர அளவின்படி அவை இயங்க வேண்டும்.

கிறிஸ்துவ தேவாலயங்கள், புத்தக் கோயில்கள், தாவோ, வாட் சியாம் ஆகியன இயங்க காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

இந்துக் கோயில்கள், காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும், மீண்டும் அதே நாளின் மாலை மணி 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையொலும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

சீக்கிய குர்துவாராக்கள் காலை 6..0 மணி முதல் காலை 9.00 மணி வரை இய்ங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இணையச் சேவை வசதி கொண்டப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களுக்குள் பக்தர்கள் உள்ளே நுழையும் முன்னர் மைசெஜாத்தெரா (mySEJAHTERA) செயலி வாயிலாகப் பதிவு செய்து கொண்டு உள்ளே நுழைய வேண்டும். விவேகக் கைப்பேசி இல்லாத மூத்த  குடிமக்களுக்கு மட்டுமே இவ்விவகாரத்தில் விதி விலக்கு வழங்கப்படுகிறது.

Exit mobile version