கோலாலம்பூர் | பிப்பரவரி 13:-
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான பதிவு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்ப்படும் நடவடிக்கை தன்னார்வ முறையில் நிர்வகிக்கப்படும். ஆகவே, தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள விரும்புகிறாவர்கள் தங்களின் பெயர்களை முன்னரே பதிந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
அடுத்த வாரம் பிரதமரால் அறிமுகம் காணாஅ விருக்கும் சிறப்புத் தடுப்பூசி விநியோக உறுதிப்பாட்டு செயற்குழுவின் (JKJAV) செயலியுலும் தற்போது பயன்பாட்டில் உள்ள மைசெஹாத்தெரா – mySEJAHTERA செயலி வாயிலாகவும் பதிந்து கொள்ளலாம். மேலும், அரசாங்கம் அல்லது தனியார் மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் இந்தப் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

