கோலாலம்பூர் | பிப்பரவ்ரி 14:-
ஆசியாவிலயே இன்பமகர்கள் என்று சொல்லப்படும் சுகர் டேடி அதிகமிருக்கும் நாடுகளில் 3வது நிலையில் மலேசியா இருப்பதாக ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாகக் கல்லூரி மாணவிகள் இதில் அதிகமாக ஈடுபடுவதாக அந்த ஆய்வு குறிப்பிடுவதாக அம்னோ தலைவர் அகமாட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 42,500 இன்பமகர்கள் இருப்பதாக புள்ளிவிவரம் காட்டுகின்றது. இரண்டாம் நிலையில் இந்தோனேசியாவும் (60,250) முதல் நிலையில் இந்தியாவும் (338,000) இருப்பதாக சீக்கிங் அரேஞ்ச்மண்ட் இணையப்பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் சூழலும் பொருளாதாரச் சிக்கலும் கல்லூரி மாணவிகளை இந்தக் காரியத்தில் ஈடுபட முதன்மைக் காரணங்களாக அமையலாம் என அகமாட் ஸாஹிட் கூறினார்.
நன்னெறியற்ற ஒழுக்கக் கேடான செய்ல்பாடாக மட்டும் இது பார்க்கப்படாமல், இசுலாமியச் சட்டத்திற்குப் புறம்பானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யார் இதற்கெல்லாம் காரணம் / யார் இதற்கெல்லாம் பொறுப்பு என யாரையும் நான் சுட்டிக் காட்ட விரும்பவில்லை. இப்பிரச்சனைக்கானத் தீர்வை நோக்கிப் பயணித்து இதில் சிக்குண்டு இருக்கும் அடுத்தத் தலைமுறையைக் காக்க வேண்டும் என்பதில் முதன்மை எண்ணம் கொண்டுள்ளேன் என அவர் மேலும் சொன்னார்.
காசுக்காக தவறான நடத்தையில் அந்தரங்கமாக செல்வதே SUGAR DADDY எனப்படும் இன்பமகர்கள் சம்பவங்கள் ஆகும். இது விபச்சாரத்துக்கு ஈடாகப் பார்க்கப் படுகிறது.
சில பேராசை கொண்ட பெண்கள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை சுகபோகமாகவும் ஆடம்பரமாகவும் வாழவே இப்படி செய்கிறார்கள். சில பெண்களின் இந்த நடவடிகைக்கள் அரசாங்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு, சுகர் டேடிகளைத் தேசியப் பதிவுகள் 40 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.
உயர்கல்வி அமைச்சு இவ்விவகாரத்தை உடனடியாகக் கையாள களத்தில் இறங்க வேண்டும். நானே அமைச்சர் டாக்டர் நோய்னி அகமாட்டை நேரடியாகத் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் குறித்து பேசியும் உள்ளேன்.
இசுலாமிய மாணவிகளை இசுலாம் அதிகாரத்துவத்தினர் காப்பாற்றுவார்கள் எனத் தாம் பெரிதும் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.
காசுக்காக மட்டும் தான் இது போன்ற காரியங்களில் இசுலாமியப் பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்றால், ஜாக்கிம், மாநில இசுலாமியத் திணைக்களங்கள், ஸாக்காட் மையங்கள், பைத்துல்மால் ஆகியன அவர்களுக்கு நிதியுதவி வழங்கலாம்.
குடும்பத்தில் கல்வி பயிலும் பெண் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். சரியான நேரத்தில் கவணிக்கத் தவறினால் SUGAR DADDY எனப்படும் மோசக்காரர்கள் பெண் பிள்ளைகளுடன் நட்பு கொண்டு ஆசை வார்த்தைகளைக் காட்டி அவர்கள் விழ வைத்து விடுவார்கள்.

