மாச்சாங் | பிப்பரவரி 15
இங்குள்ள தங்கும் விடுதி பள்ளியில் எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள 41 மாணவர்களுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளதாக கிளாந்தான் மாநிலச் சுகாதாரத் திணைக்களத்தின் இயக்குநர் டாக்டர் ஸைனி ஹுசின் உறுதிப்படுத்தியுள்ளார்.
கோவிட்-19 தொற்று மேலும் பரவாமல் இருக்க அந்த மாணவர்களின் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களும், கோத்தா பாரு, ஜூப்லி பேராக் மண்டபத்திலும் கிளாந்தான் இஸ்லாமியப் பயிற்சி மையத்திலும் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாச்சாங், தானா மேரா, பாசீர் பூத்தே ஆகிய மாவட்டகளை உள்ளடக்கிய பங்கால் சங்கோங் திரளைச் சார்ந்த நெருங்கியத் தொடர்பினால் இந்நோய்த்தொற்று பரவியுள்ளது என்று அவர் கூறினார்.
இன்றுவரை, அத்திரளையில் 56 பேர் கோவிட் -19 பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிமைப் படுத்தப்பட்டுள்ள அந்த மாணவர்கள் அனைவரும் வேறொரு நாளின் புதியத் தேர்வுத் தாட்களைக் கொண்ட தேர்வுக்கு அமர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

