கோலாலம்பூர் | பிப்பரவரி 15
சுகர் பேபி எனப்படும் இன்மங்கை என்ற பாலியல் சேவையில் பல்கலைக்கழக மாணவிகள் ஈடுபடுவது குறித்த அதிர்ச்சிகரமானத் தகவலுக்குப் பிறகு அவ்விவகாரம் குறித்து உயர்கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என மலேசிய உயர்கல்வி துறையின் தலைமை இயக்குநர், பேராசிரியர் டத்தோ டாக்டர் ஹுசைனி ஓமர் தெரிவித்திருக்கிறார்.
அச்செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதி செய்து வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளப் பல்கலைக்கழகங்களைத் தொடர்பு கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
சற்றும் எதிர்ப்பாராத விதமாக தற்போது வெளீயிடப்பட்டு மலேசியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரத்தில் நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு, பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு, மலேசிய தகவல், பல்லூடக ஆணையம், தொடர்புடைய அரசு சாரா அமைப்புகள் ஆகியவர்றை உட்படுத்தி உடனடி எடுக்கப்படும் என டாக்டர் ஹுசைனி இன்று வெலீயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

