மாச்சாங் | பிப்பரவரி 15
இங்குள்ள சமயப் பள்ளியில் எஸ்பிஎம் மாணவர்களை உட்படுத்திய கோவிட்-19 நேர்வுகள் தற்போது 64 ஆக அதிகரித்துள்ளது.
கிளாந்தான் மாநில ஊராட்சி, வீடமைப்பு, சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஸானி இது குறித்து தெரிவிக்கையில், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி பணியாளர் கள் உட்பட ஏறாத்தாழ 259 பேர் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
கிளாந்தான் மாநில கல்வித் திணைக்களமும் சுகாதாரத் திணைக்களமும் இவ்விவகாரம் குறித்து கலாந்தாலோசித்து விட்டன. அதர்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
தொற்று கண்டுள்ள எஸ்பிஎம் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேர்வு எழுதுவர்.
பெரும்பான்மையானோர் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
தொற்று கண்டவார்கள், அவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்கள், ஆரோக்கியமான மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஏற்ற மாதிரியான தேர்வு எழுதும் இடங்களை அப்பள்ளி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
மாணவர்கள் தங்கும் விடுதிக்கு நுழையும் முன்பே இதற்கு முன்னர் தொற்று கண்டவருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்திருக்கலாம் என இஸானி கூறினார்.
இருந்தாலும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், தங்கும் விடுத்துக்கு வந்தவுடனேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதால் வெளி ஆட்களுடன் தொடர்பில் இல்லை என உறுதி செய்துள்ளார்.

