Site icon அநேகன்

கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை விரைவுப் படுத்த தனியார் மருத்துவமனைகள் உதவும்

கோலாலம்பூர் | பிப்பரவரி 16:-

அரசாங்கத்திற்கு உதவும் வகையில் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதை விரைவுப்படுத்த தனியார் மருத்துவமனைகள் உதவும் என மலேசியத் தனியார் மருத்துவமனைகள் அமைப்பின் தலைவர் குல்ஜிட் சிங் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை செலுத்தும் முறை குறித்து கலந்தாலோசிக்கக் காத்திருப்பதாகவும் தனியார் மருத்துவமனைகளில் பலர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள ஆர்வமாய் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சேவைப் பொது மக்களுக்கு நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இருந்தாலும் அதற்கான (அரசு) ஆணைக்காகக் காத்திருக்கிறோம்.

அரசு மருத்துவப் பணியார்களோடு தனியார் மருத்துவப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கியதற்கு அரசாங்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரசாங்கத்துடன் ஒத்துழைத்து அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வோம்.

அத்துடன், அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தில் பொது மக்கள் இணையவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தத் தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பாபது. இதன் பக்க விளைவுகள் மிக மிக அரிது.

ஒவ்வொருவரும் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற தங்களின் முறைக்காகக் காத்திருக்க வேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசி எதிர்வரும் பிப்பரவரி 21ஆம் நாள் மலேசியா வந்தடையும்.

ஏறத்தாழ 7,000 பேர் அந்தத் தடுப்பூசியைப் பெற அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குச் செலுத்திய பின்னர், மற்றவர்களுக்கு அந்தத் தடுப்பூசி போட அவர்கள் பணிக்கப்படுவார்கள் என குல்ஜிட் குறிப்பிட்டார்.

Exit mobile version