கோலாலம்பூர் | பிப்பரவரி 16:-
முதற்கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படவிருக்கும் 68,003 பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் உட்படுத்தப்படுவர். அதில் குறிப்பாக பெண்கள், குடும்ப, சமூகநல.மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மூத்தகுடிமக்கள் நடவடிக்கை மையங்கள், அது சார்ந்த நிலையங்களில் தங்கியிருக்கும் 48,564 பேர், பதிவு பெற்ற பேறு குறைந்தோர் 19,439 பேர் ஆகியோருக்கு முதற்கட்டமாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்வழி தடுப்பூசி போடப்படும் என அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரீனா முகம்மட் ஹருன் தெரிவித்தார்.
தமது அமைச்சு தொடர்புடையவர்களுக்கும் அதன் முன்களப் பணியாளர்களான சமூக நல இலாகாவின் ஊழியர்களுக்கும் முதற்கட்டப் பட்டியலில் முன்னுரிமை வழங்கியதைத் தாம் வரவேற்பதாகவும் அதன் காரணமாக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் அரசு சாரா அமைப்பாலும் தனியாராலும் நடத்தப்படுகின்ற மூத்தகுடிமக்கள், பேறு குறைந்தோர் காப்பகத்தைச் சார்ந்தோருக்கும் அந்த முன்னுரிமையை வழங்க அரசாங்கம் பரிசீலிக்க அவர் பரிந்துரைத்துள்ளார்.

