Site icon அநேகன்

ப்ரிமாஸ்-இன் புரவலராக தான் ஶ்ரீ ரெனா துரைசிங்கம் தேர்வு ! உணவக உரிமையாளர் நலனுக்காக அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் !

பெட்டாலிங் ஜெயா | பிப்பரவ்ரி 17:-

பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் புரவலராக லோட்டஸ் குழுமத்தின் தான் ஶ்ரீ ரெனா துரை சிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புரவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தான் ஶ்ரீ ரெனா, உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து பேசினார். அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் நடப்புத் தலைவர் சுரேசும் முன்னாள் தலைவர் முத்துன்சாமி ஆகியோருடன் செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உணவுப் பொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது, மேலும், கடை வாடகை, ஊழியர்களுக்குச் சம்பளாம் போன்ற நிதிச் சுமையுடன் உணவகங்கள் நடத்தப்படுகின்றன. இக்காலக்கட்டத்தில் உணவகங்களுக்கு அரசாங்கம் சிறப்பு மானியமோ அல்லது கடனுதவியோ வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும். இதனால், உணவகங்களில் விற்கப்படும் உணவு விலை அதிகமாக இருக்கிறது எனும் குற்றச்சாட்டிலிருந்து விடுபடவும் ஏதுவாக இருக்கும் என சுரேஷ் தெரிவித்தார்.

சூழல் அதுவாக இருந்தாலும், உணவகங்களில் உணவு விலை உயர்த்தப்படாது எனும் முடிவை சங்கத்தில் தற்போது தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நிதி நெருக்கடி காலத்தில் உணவகங்கள் இயங்கத் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் ஊழியர் பற்றாக் குறையையும் உணவக உரிமையாளர்கள் சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார். லெவி கட்டணக் குறைப்பை அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகதவும் அவர் சொன்னார். அதே சமயம் உள்ளூர் தொழிலாளர்களை பணியமர்த்த ஏதுவாக அரசாஙகம் ஊழியர் ஊதிய மானியத்தை அறிவித்தால் உதவியாக இருக்கும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

தொடர் நெருக்கடியான சூழலில் இருப்பதால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக புரவலர் தான் ஶ்ரீ ரெனா துரைசிங்கம் கூறினார். எனவே, அரசாங்கம் இதனைக் கருத்தில் கொண்டு உணவகங்களில் ஒரு (பெரிய) மேசைக்கு நான்கு பேர் அல்லது ஒரு குடும்பம் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version