Site icon அநேகன்

முன்னாள் அமைச்சருடன் தொடர்பில் இருந்த பிகேஆர் லட்சியின் இந்தியப் பிரமுகரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது !

ஈப்போ | பிப்பரவரி 18:-

பிகேஆர் கட்சியின் பேரா மாநில இந்தியப் பிரமுகர் ஒருவரைக் கைது செய்து காவலில் வைத்திருப்பதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அரசாங்கத்தின் பல குத்தகைகளைத் தாம் பெறுவதற்காக கையூட்டு, ஊழல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்த அரசியல்வாதி  கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவருடன் இரு நிறுவனங்களின் இயக்குநர்களும் ஈப்போவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின்போது அவரது வீட்டில் இருந்தும் அலுவலகட்ர்ஹ்திலிருந்தும் ரி.ம. 12 லட்ச ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

மேலும், சுமார் 7 கோடி 70 இலட்சம் கொண்ட வங்கிக் கணககும் முடக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு வாக்கில் ஓர் அமைச்சில் வழங்கப்பட்ட குத்தகைகளுக்காக அவர் கையூட்டு பெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட அந்த அரசியல்வாதி அவர் பிகேஆர் கட்சியின் பேரா மாநிலத் துணைத் தலைவர் தினகரன் என சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதற்கிடையில், அந்தக் கைது நடவடிக்கைக்குப் பின்னர் ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.

தனக்குப் பழக்கமான தினகரனை குடும்ப நண்பர் எனவும் தனது உதவியாளர் அல்ல என்றும் ஓர் அறிக்கையில் முன்னாள் அமைச்சரான சேவியர் தெரிவித்தார்.

தினகரன் கைது செய்யப்பட்ட போது விசாரணையில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சருடைய ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்வததாக எம்ஏசிசி கூறியது.

பேரா மாநிலத்தில் ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை உட்படுத்திய விசாரணை தொடர்பாக தினகரன் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேல் விசாரணை நந்து கொண்டு இருப்பதால் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என எம்ஏசிசி பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version