Site icon அநேகன்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி : தவறும் முதலாளிகளுக்குத் தண்டமும் சிறையும் – டத்தோ ஶ்ரீ சரவணன்

KUALA LUMPUR, July 21 -- Human Resources Minister Datuk Seri M. Saravanan during the press conference after official lauching of Workplace Health Promotion Seminar 2020 and Activ@Work Challenge 2019 Award at World Trade Centre (WTC) today. --fotoBERNAMA (2020) COPYRIGHT RESERVED

கோலாலம்பூர் | பிப்பரவரி 18:-

முதலாளிகளால் தங்குமிட வசதி செய்து தரப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு கட்டாயமாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அதனை மீறும் முதலாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதிகப்படியாக ரி.ம. 200,000 தண்டமும் விதிக்கப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் தங்குமிடவசதிஉம் அட்தன் குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம் 2019 (சட்டம் 446) எனும் சட்டத்தின் படி தண்டனை வழங்கப்படும்.

தேசிய கோவிட்-19 பெருந்தொற்றுத் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் போது அனைத்து முதலாளிகளும் தங்கள் தொழிலாளர்களுக்கு பொது மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே கோவிட் -19 தொற்றுத் திரளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களோ அல்லது தங்களின் தங்குமிடங்களில் வசிக்கும் தொழிலாளர்களோ தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் 446 சட்டத்தின் கீழ் குற்றத்தைப் புரிகிறார்கள் என டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.

Exit mobile version