Site icon அநேகன்

காவல்துறை ஆள்சேர்ப்பு : பூமிபுத்ரா அல்லாதோருக்கு விதிமுறை தளர்வு !

கோலாலம்பூர் | மார்ச் 11

அரச மலேசியக் கவல்துறையில் பணியாற்ற பூமிபுத்ரா அல்லாதோருக்கும் பூர்வக் குடியினருக்குமான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கான்ஸ்டபல் பதவிக்குத் தேவைப்படும் எசு.பி.எம் மலாய் மொழி பாடத்திற்கானத் தேர்ச்சி விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

அந்தச் சிறப்புத் தளர்வு இம்முறை மட்டுமே. இதனால், மலாய் மொழியில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புக்கிட் அமான் நிர்வாகப் பிரிவின் தலைவர் டத்தோ ரம்லி டின் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், இன்னும் அதிகமான பூமிபுத்ரா அல்லாதோர் காவல்துறை அதிகாரியாகும் வாய்ப்பை அது ஏற்படுத்தித் தரும் என அவர் சொன்னார். எதிர்வரும் 18 முதல்ல் 31 மார்ச் மாதம் வரையில் ஆள்சேர்ப்புக்கான விண்ணப்பம் திறக்கப்படவுள்ளது.

நேர்காணல் முடித்து பணியமர்த்தம் செய்யப்பட்டாலும், அவர்க்ஜள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் எசு.பி.எம் மலாய் மொழித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே பூமிபுத்ரா அல்லாதோர் விண்ணப்பம் செய்திருந்தால், இம்முறை நடத்தப்படவுள்ள சிறப்பு ஆள்சேர்ப்பு விண்ணப்பத்தையும் செய்ய வேண்டும். அவர்களில் தமிழ், சீனம், இதர மொழிகளைச் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை https:/epengambilanpdrm.rmp.gov.my எனும் இணையத் தளத்தில் செய்யலாம்.

அந்த விண்ணப்பங்கள் மற்றத் தகுதிகளையும் நிறைவு செய்திருத்தல் அவசியம். குறிப்பாக, ஆண்களின் உயரம் குறைந்தது 163 செண்டிமீட்டர், பெண்களின் உயரம் குறைந்தது 157 செண்டி மிட்டர் அளவு இருக்க வேண்டும்.

ஆண்களின் எடை குறைந்தது 50 கிலோவாகவும், பெண்களின் எடை குறைந்தது 48 கிலோவாகவும் இருக்க வேண்டும்.

பி.எம்.ஐ குறியீடு 19 இல் இருந்து 26 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பித்தவர்களை நாட்டின் முக்கிய பெரிய நகரங்களீல் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுவர்.

மேலும், பூர்வக் குடியினருக்கான சிறப்பு ஆள் சேர்ப்பும் விரைவில் நடத்தப்படும் என டத்தோ ரம்லி கூறினார்.

பூர்வக் குடியினருக்கான சிறப்பு ஆள்சேர்ப்பில் காவல்துறை ஆய்வாளர் Gred YA13வ் கான்ஸ்டபில் YA1, பூர்வக் குடியினர் காவல்துறை அதிகாரி Gred YP1, கான்ஸ்டபில் YT1 ஆகிய பதவிகளுக்கும் தகுதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஆண்களின் உயரம் குறைந்தது 160 செண்டிமீட்டர், பெண்களின் உயரம் குறைந்தது 155 செண்டி மிட்டர் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version