Site icon அநேகன்

முதற்கட்டத் தடுப்பூசி : 11 மார்ச் வரையில் ஏறத்தாழ 2.5 இலட்சம் பேருக்குச் செலுத்தப்பட்டது

கோலாலம்பூர் | மார்ச் 12:-

நேற்றைய நிலவரப்படி ஏறத்தாழ 249,909 பேருக்கு கோவிட்-19 முதற்கட்டத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மிக அதிகமானோருக்கு, அதாவது 29,208 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த நிலையில் சரவாக்கில் 28,212 பேருக்கும் சபாவில் 20,411 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

இதனிடயே, மற்ற மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு :

பேரா 21,160
ஜோகூர் 19,559
பகாங் 19,314
கெடா 15, 834
கிளாந்தான் 15,339
திரங்கானு 13,070
பினாங்கு 12,608
நெகிரி செம்பிலான் 10,801
மலாக்கா 7,126
பெர்லிஸ் 6,006
புத்ராஜெயா 3,733
இலாபுவான் 2,338

கடந்த பிப்பரவரி 24ஆம் நாள் தொடங்கிய தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் பொது மக்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Exit mobile version