Site icon அநேகன்

தேசியக் கூட்டணியிடமிருந்து பதவியைப் பெற்ற 8 ஜ.செ.க. உறுப்பினர்கள் நீக்கம் !

KUCHING, 5 Nov -- Pengerusi DAP Sarawak Chong Chieng Jen ditemu ramah media selepas pembentangan belanjawan oleh Ketua Menteri Sarawak pada persidangan hari pertama Mesyuarat Kedua Bagi Penggal Ketiga Dewan Undangan Negeri Sarawak Ke-18 hari ini. --fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA

ஈப்போ | மார்ச் 13

தேசியக் கூட்டணி வழங்கியப் பதவியைப் பெற்றுக் கொண்ட தனது 8 உறுப்பினர்களை பேரா மாநில ஜ.செ.க. அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கியது.

அவர்கள் அனைவருக்கும் தங்கள் வசிப்பிடத்தில் உள்ளா கிராம மேம்பாட்டு – பாதுகாப்பு செயற்குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வோங் சீ மிங், சூ கோக் செங், லியுவ் கீ ஹோ, லோ கோக் வெங், செங் காய் மெங், கோர் ஆஹ் லாக் வோங் சீ ஆகியோர் ஜ.செ.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

மேலும், சான் ஃபூக் சிங் என்பவர் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் லியோங் செயோக் கெங்கின் உதவியாளராகச் சேவையாற்றியது தெரிய வந்த பிறகு உடனடியாக ஜ.செ.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்தின் அனுமதின்றி எந்தப் பதவியையும் பெறக் கூடாது என அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவின் தலைவர் சோங் சியேன் ஜென் தெரிவித்தார்.

 தேசியக் கூட்டணி வழங்கும் பதவியால் சுயநலத்திற்காக கட்சியின் நேர்மைத் தன்மையையும் சுய மரியாதையும் கெடுத்து விடாதீர்கள்.

இது கட்சிக்கு மட்டும் அல்ல, நம்மை நம்பியுள்ள மக்களுக்கும் சேர்த்து இழைக்கும் துரோகமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version