Site icon அநேகன்

பாரம்பரியத் தொகுதி என்பது இனி கிடையாது – கெராக்கான் தலைவர் டோமனிக் லாவ்

கோலாலம்பூர் | மார்ச் 13

எதிர்வரும் 15வாது பொதுத் தேர்தலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் கெராக்கான் கட்சிக்கு பாரம்பரியத் தொகுதி என்பது இனி கிடையாது என அக்கட்சியின் தலைவர் டோமனிக் லாவ் தெரிவித்தார்.

அக்கட்சியின் தேசிய நிலையிலான ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அரசியல் தற்போது மாற்றம் கண்டுள்ளதாகவும் அம்மாற்றத்திற்கு ஏற்ப கெராக்கான் தன்னை மாற்றிக் கொண்டு தயாராகும் சூழலுக்கு வந்து விட்டதாககும் குறிப்பிட்டார்.

ஒரு சில கட்சியின் பாரம்பரியத் தொகுதி எனும் விவகாரத்தை கெராக்கான் உறுப்பினர்கள் மறந்து விட அறிவுறுத்துகிறேன்.

1968 இல் தோற்றுவிக்கப்பட்ட கெராக்கான் கட்சி அதிவேகமாக வளர்ச்சி கண்டு 1972இல் பெரிக்காத்தானில் இணைந்தது. பின்னர் தேசிய முன்னணியாக அந்தக் கூட்டணி உரு பெற்றது.

ஆரம்பக் காலத்தில் பினாங்கை மையமாகக் கொண்டு கெராக்கான் செயல்பட்டு வந்தது. பின்னர் தீபகற்ப மலேசியா முழுவதும் அதற்குக் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு நடைபெற்றப் பொதுத்தேர்தலில் கெராக்கான் படு மோசமானத் தோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து தேசிய முன்னணியில் இருந்து விலகிய கெராக்கான் இவ்வாண்டு பிப்பரவரி வாக்கில் தேசியக் கூட்டணியுடன் இணைந்தது.

தற்போது தேசியக் கூட்டணியின் கீழ் கெராக்கான் இருந்தாலும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் நிலையில்லாச் சூழலைச் சந்திக்க கெராக்கான் உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் தமதுரையில் கூறினார்.

உறுப்பியக் கட்சிகளிடையே போட்டிகள் / மோதல்களையும் புதிய அரசாங்கம் உருவாக்கப்படுவதையும் நாம் காணலாம்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

தேசியக் கூட்டணியுடன் இணைய இன்னும் சில கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டும் கட்சியின் தலைமைத்துடன் கலந்தாலோசித்த பின்னரே, தாம் தேசியக் கூட்டணியோடு இணைந்ததாக அவர் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு டத்தோ ஶ்ரீ அன்வாரைப் பிரதமராக ஆக்கி விட வேண்டும் என்பதே குறிக்கோள்.

ஆனால், தேசியக் கூட்டணி அப்பப்பட்டது அல்ல. பதவிப் பேராசை கொண்டவர்களிடம் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதே தேசியக்க் கூட்டணியின் இலக்காகும்.

இங்கு ஊழல் இல்லை, கையூட்டு இல்லை, அதே பயைய முகங்களும் இல்லை என டோமனிக் லாவ் குறிப்பிட்டார்.

Exit mobile version