Site icon அநேகன்

பங்சாரில் நடந்த மோதல் : ஒருவர் பலி ! இன்னொருவர் படுகாயம் !

பங்சார் | மார்ச் 13:-

இன்று அதிகாலை பங்சார் வில்லேஜ் ஜாலான் தெலாவி 2இல் நடந்த கைகலப்பு முற்றியதில் ஆடவர் ஒருவர் பலியானதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

அந்த ஆடவர் பத்துமலை, கம்போங் லக்ஸ்மானாவைச் சேர்ந்த சஞ்சீத் குமார் த/பெ மூர்த்தி எனவும் அவர் 28 வயது மிக்கவர் எனவும் காவல்துறை தெரிவித்துல்ளது. அந்த ஆடவர் மீது 2 குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதே சம்பவத்தில் கோலாலம்பூர் தாமான் வாஹ்யூவைச் சேர்ந்த 30 வயது விக்னேஸ்வரன் த/பெ ஜெயபாலன் படுகாயத்திற்கு ஆளானார்.

காவல்துறை நடத்திய விசாரணையில், மரணமடைந்த சஞ்சீத்தும் அவரது நண்பர்களும் Maccal @ Chennai எனும் கடையில் மது வாங்கி அருந்தி விட்டு அருகில் இருக்கும் கார் நிறுத்தும் இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு சந்தேகிகும் படியான ஒரு கும்பல் இருந்துள்ளது. அவர்களுடன் ஏற்பட்டுள்ள மோதலில் சஞ்சீத் குமார் கத்தியால் வெட்டப்பட்டதோடு பீர் போத்தலாலும் குத்தப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்டுள்ள சஞ்சீத்  ஏறத்தாழ150 மீட்டர் ஓடி 7- eleven முன்னர் விழுந்தார். சஞ்சீத் அவரது நண்பரால் மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் அங்கேயே உயிரிழந்தார்.

தக்கியவருக்கும் உயிரிழந்த சஞ்சீத்துக்கும் ஏற்கெனவே முன்பகை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் சந்தேகிக்கப்படும் 5 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

முகத்தில் கடுமையானக் காயத்துக்குள்ளான விக்னேஸ்வரன் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்தக் கைகலப்பு தொடர்பான காணொலி இணைப்பு : https://fb.watch/4ckoTGk7P_/

Exit mobile version