Site icon அநேகன்

சிலாங்கூரின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிக் எண்ணிகைகளில் தவறு நேர்ந்துள்ளது !

ஷா ஆலாம் | ஜூன் 5 :-

கடந்த மாத இறுதியில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கையிருப்பில் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பதாகக் காட்டியக் கணக்கில் பிழை இருப்பதாக கோவிட்-19 தடுப்பூசி செயற்குழு – CITF தெரிவித்துள்ளது.

இத்தகவலை மறுத்த சிலாங்கூர் மாநில அரசு, கடந்த ஜூன் 1 ஆம் நாள் கணக்கின்படி, அம்மாநிலத்திடம் 615,000 மட்டுமே இருப்பதாக உறுதியளித்துள்ளது.

இன்று அம்மாநில அரசு அளித்துள்ள விளக்கத்தின்படி CITF அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

எஞ்சி இருக்கும் 2.3 மில்லியன் தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ள எண்ணிக்கை என CITF குறிப்பிட்டுள்ளது.

.

Exit mobile version