கோலாலம்பூர் | ஜூன் 6 :-
கடந்த ஜூன் 1 தொடங்கி நாள் ஒன்றுக்கு சராசரியாக 12,000 மாநில – மாவட்ட எல்லையைக் கடக்கக் காவல் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் இது குறித்துத் தெரிவிக்கயில், அவ்வனுமதிகள் யாவும் அவசரக் காரணாங்களுக்காகவும் சொந்த வேலை செய்கிறவர்களுக்காகவும், இறப்பு போன்றத் தவிர்க்க முடியாத சூழலை மையப்படுத்தியும் வழங்கப்பட்டவை எனக் குறிப்பிட்டார்.
மேலும், நாடு முழுவதும் மாநில – மாவட்ட எல்லைகளைக் கடக்கப் பயன்படுத்தப்படும் 118 சிறிய மாற்று வழிச் சாலைகள் காவல்துறையால் மூடப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளைகளில் மேற்கொள்ளப்பட்டச் சோதனைகளில் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டிப்பாட்டு ஆணைக் காலத்துக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 1.3 மில்லியன் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், அது தற்பொழுது 500,000 ஆகக் குறைந்துள்ளது.
முழு கட்டுப்பாடு காலத்தில் தொடர்புடைய அதிகாரத்துவத்தால் நாள் ஒன்றுக்கு 85,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடைகள், பேரங்காடிகள், உணாவகங்கள், ஆலைகல், தற்பொழுத் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள இதர இடங்கள் உட்பட ஏறத்தாழ 35,000 வணிகத்தளங்களில் சோதனையிடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 1 முதல் ஜூன் 4 ஆம் நாள் வரையில், எஸ்.ஓ.பி.யை மீறியக் குற்றத்திற்காக சுமார் 3,514 தண்டங்கள் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 117 நிறுவனங்களுக்கு எதிரானவையாகவும் 163 கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.

